உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விழிப்புணர்வு முகாம்

 விழிப்புணர்வு முகாம்

புவனகிரி: கீரப்பாளையம் அருகே கண்ணங்குடியில் பெண்களுக்கு சுகாதார விழிப்புணர்வு முகாம் பிளஸ் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்தது. கீரப்பாளையம் அடுத்த கண்ணங்குடி சமுதாய கூடத்தில் நடந்த சிறப்பு முகாமில் பெண்களுக்கான கருப்பை வாய் சுகாதார விழிப்புணர்வு மற்றும் வளரிளம் பெண்களுக்கான சிறப்பு முகாம், சுவிட்சர்லாந்த் லின்ஸி நிறுவன நிதியுதவியுடன் நடந்தது. முகாமில், கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆறு கிராமங்ளை சேர்ந்த வளரிளம் பெண்கள் மற்றும் 12 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் பங்கேற்றனர். சிதம்பரம் அஞ்சுகா மருத்துவமனை டாக்டர் பிரார்த்தனா பங்கேற்று, ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ