உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விழிப்புணர்வு நிகழ்ச்சி 

விழிப்புணர்வு நிகழ்ச்சி 

கடலுார் : கடலுார் புதுப்பாளையம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக ரேபிஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா தலைமை தாங்கி, ரேபிஸ் நோய் பரவும் விதம், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம், நாய் கடித்தால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சை குறித்து விளக்கினார். பின், ரேபிஸ் நோய் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை