விழிப்புணர்வு பேரணி
புவனகிரி: புவனகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அலுவலக கண்காணிப்பாளர் கண்ணன் வரவேற்றார். பேரணியை செயல் அலுவலர் அண்ணாதுரை துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக ஓட்டுப்பதிவை வலியுறுத்தி அலுவலக பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள் உள்ளிட்டோர் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று, மீண்டும் அலுவலகத்தில் முடித்தனர். முன்னதாக, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கோலம் வரைந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.