உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விழிப்புணர்வு பேரணி  

 விழிப்புணர்வு பேரணி  

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் பள்ளி சார்பில் ஓட்டு அளிப்பதற்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின்ரோடு பகுதியில், துவங்கிய பேரணி நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் சாமுவேல் சுஜின் தலைமை தாங்கினார். சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் சிறப்புரையாற்றி மாணவர்களின் பேரணியை துவக்கி வைத்தார். மாணவர்கள் வரும் சட்டசபை தேர்தலில் பொதுமக்கள் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்த ஜனநாயக கடமையாற்ற வேண்டும். நாட்டில் பிறந்த அனைவரும் 18 வயதிற்கு பிறகு கட்டாயம் ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும். தேர்தல்களில் ஓட்டளிப்பது கடமையாகும், என மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைளுடன் பேரணி சென்றனர். பேரணி மும்முனை சந்திப்பு, கடைவீதி, பஸ்நிலையம், அள்ளூர் வழியாக பூதங்குடி எஸ்.டி. சீயோன் பள்ளியை வந்தடைந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். :


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை