உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புவனகிரி குறு வட்ட விளையாட்டு போட்டிகள்

புவனகிரி குறு வட்ட விளையாட்டு போட்டிகள்

புவனகிரி: புவனகிரி குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழக விளையாட்டு அரங்கில் நடந்தது. தமிழக அரசு பள்ளி கல்வித்தறை வழிகாட்டி நெறிமுறை படி, புவனகிரி குறுவட்டத்தை சேர்ந்த பள்ளிகளில் படிக்கும் 17 வயதிற்கான மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகளான கபடி, கோ கோ, இறகு பந்து, பூப்பந்து, கால்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, வளைபந்து, எறிபந்து மற்றும் இறகுப்பந்து உள்ளிட்ட பல்வேறுப்போட்டிகள் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் துவங்கியது. அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் முன்னிலையில், புவனகிரி குறுவட்ட போட்டிகளின் சங்க செயலாளர் ரவி போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டிகளுக்கான ஏற்பாட்டினை குறுவட்ட வட்ட இணை செயலாளர் ராமசாமி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை