உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் திருடன் கைது; 10 பைக்குகள் பறிமுதல்

பைக் திருடன் கைது; 10 பைக்குகள் பறிமுதல்

பண்ருட்டி; பண்ருட்டி அருகே 10 மோட்டார் சைக்கிள் திருடிய பலே வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி - அரசூர் மெயின்ரோடு படைவீட்டம்மன் கோவில் அருகே பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி, டி.எஸ்.பி., தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அவ்வழியே வந்த நம்பர் பிளேட் இல்லாத பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். பைக் ஓட்டி வந்தவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். தீவிர விசாரணையில் அவர் பண்டரக்கோட்டை குச்சிப்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் மகன் நல்லசிவம், 22; என தெரியவந்தது.இவர், பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுார், கணிசப்பாக்கம், மேலிருப்பு விழுப்புரம், திருவெண்ணெய்நல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் பைக்குகள் திருடியதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து நல்லசிவத்தை கைது செய்து, அவரிடமிருந்து 10 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ