பா.ஜ., மாவட்ட தலைவர் அமைச்சருக்கு கண்டனம்
கடலுார்; பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து பேச தி.மு.க.,வினருக்கு தகுதியில்லை என பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் தமிழழகன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழக அமைச்சர் கோவி.செழியன், பா.ஜ.,வை உலக அளவில் துாக்கி நிறுத்துவேன் என்ற முன்னாள் மாநிலத் தலைவரின் அண்ணாமலையின் நிலையே ஆட்டத்தில் இருக்கும்போது மற்ற பா.ஜ.,தலைவர்களால் என்ன மாற்றத்தைக்கொண்டு வந்துவிட முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார். முன்னாள் தலைவர் அண்ணாமலை பதவியில் இல்லாதபோதும், தி.மு.க.,வினரின் துாக்கத்தை தொலைக்கச் செய்வதால் அவர் மீது வன்மம். உங்களையும் சேர்த்து அவரைப்பற்றி பேச ஒரு தி.மு.க.,காரருக்கு கூட தகுதியில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.