நீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி ஏரியில் மீன்பிடித்த போது விபரீதம்
சிறுபாக்கம்:சிறுபாக்கம் அருகே ஏரியில் மீன் பிடித்த சிறுவன், சிறுமி நீரில் மூழ்கி இறந்தனர். கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் அடுத்த கீழ்ஒரத்துாரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி ஆஷா, 24. இவர்கள் மகன் குணா, 6; அதே பகுதியை சேர்ந்த சாஸ்தாவின் மகள் சிவதர்ஷினி, 8; அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, 4:30 மணியளவில் ஆஷா தன் மகன் குணா மற்றும் சிவதர்ஷினியுடன் அதே பகுதியில் உள்ள அசகளத்துார் ஏரியில் மீன் பிடிக்க சென்றார். ஆஷா மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிவதர்ஷினியும், குணாவும் ஏரியில் தவறி விழுந்து மூழ்கி இறந்தனர். சிறுபாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.