உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கொட்டகையை கொளுத்திய சிறுவன் கைது

 கொட்டகையை கொளுத்திய சிறுவன் கைது

பரங்கிப்பேட்டை; புவனகிரியில், கொட்டகையை கொளுத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர். புவனகிரி தாமரை குளத்தெருவை சேர்ந்தவர் ராஜா, 45; இவரது, உறவினர் செல்வம். இந்த இருவருக்கும் பன்றி வளர்ப்பதில் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்று செல்வத்தின், 17 வயதுள்ள மகன், ராஜாவின் பன்றி வளர்க்கும் கொட்டகையை, தீ வைத்து கொளுத்தினார். இதுகுறித்து, ராஜா கொடுத்த புகாரின்பேரில், புவனகிரி போலீசார் சிறுவனை, கைது செய்து கூர் நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை