மேலும் செய்திகள்
ஓவிய போட்டி: பரிசளிப்பு விழா
1 hour(s) ago
ஹான்ஸ் விற்ற கடைக்காரர் கைது
1 hour(s) ago
பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம் பகுதிகளில் மின்தடை
2 hour(s) ago
நடுவீரப்பட்டு : சாத்திப்பட்டு - சி.என்.பாளையம் சாலையில் ஓடையின் குறுக்கே கட்டப்படும் பாலம் கட்டுமான பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டிலிருந்து சி.என்.பாளையம் செல்லும் சாலையில் நெல்லித்தோப்பு சங்கிலியான் ஓடையில் இருந்த சிறிய பாலம் பழுதடைந்தது. இதையடுத்து, புதிய உயர்மட்ட பாலம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், நபார்டு திட்டத்தின் கீழ் 8 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பில் கடந்த 2022ம் ஆண்டு புதிய பாலம் கட்டுமான பணிகள் துவங்கியது. இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இதனால், இரண்டு ஆண்டுகளாக இந்த சாலை வழியாக பஸ் போக்குவரத்து இல்லை. பஸ் வசதி இல்லாததால், இப்பகுதி கிராம மக்கள் வெளியூர் செல்வதற்கு கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பாலம் கட்டுமான பணியை விரைந்து முடித்து பஸ் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்திட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago