தம்பியை தாக்கிய அண்ணன் கைது
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே சொத்து கேட்ட தம்பிக்கு கொலைமிரட்டல் விடுத்த அண்ணன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த ஒதியடிக்குப்பம் கிழக்குதெருவை சேர்ந்தவர் அருள், 38; போலீசான இவர், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் வேலை செய்கிறார்.இவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சென்றார். இரண்டாவது மனைவியும் தற்கொலை செய்து கொண்டார். இவரது தந்தை அரிகிருஷ்ணன் சொத்து அருள் பேரில் இருந்தால் பிரச்னை வரும் என்பதால் அவரது அண்ணன் ராமலிங்கம் பேரில் பாகபத்திரம் எழுதி வைத்தார். நேற்று முன்தினம் இரவு அருள், ராமலிங்கத்திடம் தனக்கு சேரவேண்டிய சொத்துகளை கொடுக்குமாறு கேட்டார்.ஆத்திரமடைந்த ராமலிங்கம், அவரது மகன் பிரசாத், ஆதரவாளர் சுரேந்தர் ஆகியோர் அருளை இரும்பு பைப்பால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். படு காயமடைந்த அருள் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது புகாரின் பேரில், மூவர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து ராமலிங்கம்,52; சுரேந்தர்,24, ஆகியோரை கைது செய்தனர்.