உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  திருமாவளவன் மீது வழக்கு

 திருமாவளவன் மீது வழக்கு

நெல்லிக்குப்பம்: பண்ருட்டி தொகுதி வி.சி., வேட்பாளர் அப்துல் ரஹ்மானை ஆதரித்து கடந்த 10 ம் தேதி இரவு நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் வி.சி., தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.இதற்காக கூட்டம் நடந்த இடத்துக்கு இரவு 10.20 மணிக்கு திருமாவளவன் வந்தார். தேர்தல் ஆணையம் விதிப்படி இரவு 10 மணி வரை தான் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதால் திருமாவளவன் பேசாமல் கையசத்தபடி சென்றார்.ஆனால் தொண்டர்கள் பானை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு கோஷமிட்டனர்.இது தேர்தல் விதிக்கு மீறியது என உதவி தேர்தல் அலுவலர் பலராமன் போலீசில் புகார் அளித்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வி.சி., தலைவர் திருமாவளவன்,வேட்பாளர் அப்துல் ரஹ்மான்,தொகுதி செயலாளர் அருள்செல்வம்,முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன்,மாவட்ட துணை செயலாளர் புலிகொடியான் உட்பட பலர் மீது வழக்கு பதிந்ததுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !