பள்ளி மாணவிகளுக்கு அகப்பயிற்சி சான்றிதழ்
நடுவீரப்பட்டு: பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி நர்சிங் மாணவ, மாணவிகளுக்கு அகப்பயிற்சிகான சான்றிதழ் வழங்கப்பட்டது.நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நர்சிங் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு உத்தரவின் பேரில் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாாரநிலையத்தில் 10 நாட்கள் அகப்பயிற்சி பெற்றனர்.பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பள்ளியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை மீனாம்பிகை தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு ஆசிரியர் புஷ்பநாதன் வரவேற்றார். நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவிசித்ரா, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஆசிரியர்கள் ஜோதிமுத்து, கோபிநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் இம்ரான்கான், கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர்.உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.