உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் தி.மு.க., சார்பில்  உதயநிதிக்கு வரவேற்பு 

சிதம்பரம் தி.மு.க., சார்பில்  உதயநிதிக்கு வரவேற்பு 

சிதம்பரம்: தமிழக துணை முதல்வர் உதயநிதி நேற்று ஆய்வு பணிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்விற்காக கடலுார் வருகை தந்தார். அவருக்கு கடலுார் கம்பியம்பேட்டையில், சிதம்பரம் சட்டசபை தொகுதி தி.மு.க., சார்பில், சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சங்கர், முத்துபெருமாள், கலையரசன், மனோகர், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழனி, பரங்கிப்பேட்டை சேர்மன் தேன்மொழி சங்கர், துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கிள்ளை துரைபிரபு மற்றும் சிதம்பரம் நகர நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி