உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாருக்கு முதல்வர் வருகை மஞ்சக்குப்பம் மைதானம் சீரமைப்பு

கடலுாருக்கு முதல்வர் வருகை மஞ்சக்குப்பம் மைதானம் சீரமைப்பு

கடலுார் : கடலுாருக்கு முதல்வர் வருவதையொட்டி, மஞ்சக்குப்பம் மைதானம் சீரமைக்கும் பணி நடந்தது.தமிழக முதல்வர் ஸ்டாலின், மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வருகிறார்.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் வரும் 21, 22ம் தேதிகளில் முதல்வர் வருகை தர உள்ளார். அதையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில், முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், முதல்வர் விழாவுக்காக, கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தை, பொக்லைன் இயந்திரம் மூலமாக சமப்படுத்தி, சீர்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ