மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு பூண்டியில் குழு கூட்டம்
28-Jun-2025
கிள்ளை : கிள்ளை பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் நடந்தது. சேர்மன் மல்லிகா தலைமை தாங்கினார். துணை சேர்மன் கிள்ளை ரவீந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்யா, பங்கேற்று பேசினார். கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் யாஸ்மின், துணைத் தலைவர் மலையரசன், குமார், ஆசிரியர் ஜான்சி, போலீஸ் ஏட்டு சதீஷ், சுகாதார ஆய்வாளர் பிரேம்குமார், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சாரதா, இந்திரகலா, கவியரசி, விமல்குமாரி உட்பட பலர் பங்கேற்றனர். தலைமை எழுத்தர் செல்வராஜ் நன்றி கூறினார்.
28-Jun-2025