உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் போலீசிற்கு மிரட்டல் சின்னசேலம் வாலிபர் கைது

பெண் போலீசிற்கு மிரட்டல் சின்னசேலம் வாலிபர் கைது

கடலுார், : கடலுாரில் பெண் போலீசை திட்டி கொலை மிரட்டல் விடுத்த சின்னசேலம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, கோர்க்காடு பகுதியை சேரந்தவர் ராம்குமார் மனைவி சரண்யா, 32; கடலுார் ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிகிறார். இவருடன் பணிபுரியும் பவித்ரா என்பவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கூகையூரை சேர்ந்த மணிகண்டன், 33; என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக 2022ம் ஆண்டு தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், சரண்யா, தன்னுடன் பணிபுரியும் இருவருடன், நேற்று காலை கடலுார் சப் ஜெயில் அருகே நடந்து சென்றார். அங்கு வந்த மணிகண்டன், சரண்யாவை வழிமறித்து, பவித்ரா குறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். தனக்கு தெரியாது என சரண்யா கூறியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஆபாசமாக திட்டி அவரை கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார் புகாரின்பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி