உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இறுதி ஊர்வலத்தில் மோதல்: 4 பேர் காயம்

இறுதி ஊர்வலத்தில் மோதல்: 4 பேர் காயம்

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அருகே இறுதி ஊர்வலத்தில் வெடி வெடித்ததில் ஏற்பட்ட பிரச்னையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். நடுவீரப்பட்டு அடுத்த சேர்க்காம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன்,35;நேற்று முன்தினம் மாலை பரிசமங்கலத்தை சேர்ந்த ஒருவரின் இறுதி ஊர்வலம் ஆனந்தன் வீட்டின் வழியாக சென்றது. இறுதி ஊர்வலத்தில் பரிசமங்கலத்தை சேர்ந்த கதிரவன் வெடி வெடித்தார்.இந்த வெடி ஆனந்தன் வீட்டினுள் சென்று வெடித்தது. இதை ஆனந்தன் தட்டி கே ட்டார்.இதனால் ஆத்திரமடைந்த பரிசமங்கலத்தை சேர்ந்த கதிரவன், ராபின், தீபன், ரவி, விஜய், திவான், ஆகாஷ், முகிலன், தென்னவன், ராபின், விஷ்வா, திருப்பாதிரிப்புலியூர் விஷ்வா உள்ளிட்ட பலர் ஆனந்தனை தாக்கினர். இ தை தடுக்க வந்த ஆனந்தன்,இவரது அண்ணன் கந்தகுமரவேலு,மற்றும் உறவினர்கள் அருள்,வெங்கடேசன் உள்ளிட்டவர்களையும் தாக்கினர்.இதில் ஆனந்தன், கந்தகுமரவேலு,அருள்,வெங்கடேசன் ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்து கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மோதல் குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து தென்னவன்,32; ராபின்,25; விஷ்வா,19; ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ