உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மாணவர்களுக்குள் மோதல் விருத்தாசலத்தில் பரபரப்பு

 மாணவர்களுக்குள் மோதல் விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்து வெளியேறியபோது, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவர்கள் சிலருக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், பள்ளி மாணவர்களுக்கு ஆதரவாக, அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என தனிநபர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, மோதலில் ஈடுபட்ட மாணவர்கள், அவர்களின் ஆதரவாளர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்ட சம்பவத்தால், விருத்தாசலத்தில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி