உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அனுமதியின்றி செங்கல் சூளை கலெக்டர் எச்சரிக்கை

அனுமதியின்றி செங்கல் சூளை கலெக்டர் எச்சரிக்கை

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் செங்கல் சூளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரசின் அனுமதியின்றி, சேம்பர் செங்கல் சூளை, நாட்டு செங்கல் சூளை நடத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே, கடலுார் கலெக்டர் அலுவலகத்திலுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், கட்டணம் செலுத்தி, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின் படி, முறையான அனுமதி பெற வேண்டும். மேலும், அரசு அனுமதியின்றி நாட்டு செங்கல் சூளை வைத்திருப்போர் மீதும்,செங்கல் சூளைக்கான மண் இருப்பு வைத்திருப்போர் மீதும், மண் கடத்துவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை