உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பணிநிறைவு பாராட்டு விழா  

 பணிநிறைவு பாராட்டு விழா  

புவனகிரி: புவனகிரியில் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது. புவனகிரி ஒன்றியம், மேல்புவனகிரி ஈஸ்வரன்கோவில் தெரு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் விஜயகுமாரி. இவர் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதற்கான பணிநிறைவு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பட்டதாரி ஆசிரியர் சண்முகசுந்தரம் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி, மேற்பார்வையாளர் அருள்சங்கு, ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் துரைமணிராஜன் ஆகியோர் வாழ்த்தி நினைவு பரிசு வழங்கினர். விழாவில் ஆசிரியர்கள் சத்தியநாராயணன், பாபுகணேஷ், ஆரோக்கியதாஸ், சாந்தி, முருகன், குமாரவேல், மணிமொழி, பத்மாவதி ,வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர். ஆசிரியர் சக்திபிரியா நன்றி கூறினார். விஜயகுமாரி ஏற்புரை நிகழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ