விசாரணை அதிகாரி யார் காக்க ி களிடையே போட்டி
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் வழக்குகளை விசாரணை செய்ய போலீசார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நிலத் தகராறு, குடும்ப சண்டை, சாலை விபத்து உள்ளிட்ட வழக்குகளில் பஞ்சாயத்து செய்து கறக்கும் 'ப' வைட்டமினை விசாரணை அதிகாரியோடு சேர்ந்து விடுகிறது. அவர் நினைத்தால் மற்றவர்களுக்கு கொடுப்பார் என்ற நிலை உள்ளது. இதனால், இந்த ஸ்டேஷனில் வழக்கு விசாரணை அதிகாரியாவதில் காக்கிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தனிப்பிரிவின் ஆதரவை பெற்றவர் மட்டுமே, விசாரணை அதிகாரியாகும் நிலை உள்ளது. வேறு நபர் விசாரணை அதிகாரியா இருந்தால், அன்று புகார் அளிக்க வருபவர்களிடம், தங்களது விசாரணை அன்று வருமாறு கூறி அனுப்பி வைக்கின்றனர். இதனால், பிற காக்கிகளிடயே கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.