உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி நெல்லிக்குப்பம் போலீசில் புகார்

எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி நெல்லிக்குப்பம் போலீசில் புகார்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே சிறுவனை தாக்கியதாக, சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த பில்லாலி தொட்டி பெரிய காலனியில் ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக போதை பொருள் தடுப்பு சப் இன்ஸ்பெக்டர் தவசெல்வத்துக்கு, கடந்த 22ம் தேதி தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சாதாரண உடையில் தவசெல்வம், காவலர் தனவேலு சென்று, அங்கிருந்த 14 வயது சிறுவனிடம் விசாரணை செய்தனர்.சிறுவன் கூச்சல் போட்டதால், வந்திருப்பது போலீஸ் என தெரியாமல் மக்கள் கூடி தவசெல்வத்தை தாக்கினர். இச்சம்பவத்தில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, ஆனந்தகுமார், 48 என்பவரை கைது செய்து, 8 பேரை தேடி வருகின்றனர்.இந்நிலையில், சிறுவனின் தாய் கவுரி மற்றும் மனித உரிமை அமைப்பினர் நேற்று நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் வந்து, சிறுவனை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் அளித்தனர்.அந்த மனுவில், 'கடந்த 22ம் தேதி எங்கள் வீட்டுக்கு வந்த 2 மர்ம நபர்கள் என்னையும் எனது மகனையும் தாக்கினர். இதை பார்த்த மக்கள் அவர்கள் யார் என தெரியாமல் பிடித்து போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர். அதன் பிறகே எங்கள் வீட்டுக்கு வந்ததும் போலீசார் என தெரிந்தது. எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ