உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

முதல்வர் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

கடலுார்: சென்னையில் நடந்த முதல்வர் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற கடலுார் மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது. சென்னையில் நடந்த முதல்வர் கோப்பை விளையாட்டுப்போட்டியில், மாற்றுத்திறனாளி பள்ளி மாணவிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில், கடலுார் செயின்ட் மேரிஸ் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி ரக் ஷனா, தங்கப்பதக்கம் வென்று ஒருலட்ச ரூபாய் ரொக்கப்பரிசு வென்றார். கடந்த வருடமும் இதேபோட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். தங்கப்பதக்கம் வென்ற மாணவி ரக் ஷனாவிற்கு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பாராட்டுவிழா நடந்தது. ஓய்வுபெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஞானசேகர், உடற்கல்வி ஆசிரியர் அருட்செல்வம், தேசிய கபடி வீரர் ஞானமுருகன் உட்பட பலர் மாணவியை பாராட்டினர். வேவ்ஸ் கால்பந்து அகாடமி பயிற்சியாளர் மகேஷ் மற்றும் விளையாட்டு வீரர், வீராங் கனைகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !