மேலும் செய்திகள்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
14-Aug-2025
காட்டுமன்னார் கோவில், ; காட்டுமன்னார் கோவிலில் கடலுார் மாவட்ட கட்டுமான தொழிலாளர்சங்கத்தின் 10வது மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் திருஞானம், சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் சுந்தரவடிவேல் ஆகியோர் மாநாட்டு கொடியேற்றினர். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜெயசீலன் தீர்மானம் வசிவத்தார். மாநில துணைத் தலைவர் தங்கமோகனன் மாநாட்டை துவக்கிவைத்தார். மாவட்டபொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் கார்த்திகேயன் அறிக்கை வாசித்தனர். மாவட்ட இணை செயலாளர்கள் பாபு, கருணாகரன், தனசேகர் தீர்மானத்தை முன்மொழிந்தனர். நிர்வாகிகள் கருப்பையன்,பழனிவேல், கதிர்காமன், ரஞ்சித்குமார் வாழ்த்திப் பேசினர். சி.ஐ.டி.யு., மாநில துணைத் தலைவர் எம்.எல்.ஏ.,மகேந்திரன் பேசினார். பெண் தொழிலாளர்களுக்கு 55வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. காளிதாஸ்நன்றி கூறினார்.
14-Aug-2025