கூட்டுறவு பணியாளர் குறைதீர் முகாம்
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்களின் குறைதீர்க்கும் முகாம் கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடந்தது.முகாமிற்கு மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவு ரேஷன்கடை பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். முகாமில் சரக துணைப்பதிவாளர்கள் சிதம்பரம் ரங்கநாதன், விருத்தாசலம் சவிதா, விருத்தாசலம் கூட்டுறவு நகர வங்கியின் மேலாண் இயக்குனர் கோகுல், இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.