உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பி திருட்டு 

 டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பி திருட்டு 

கடலுார்: வடலுார் அருகே டிரான்ஸ்பார்மர் உடைத்து காப்பர் கம்பி திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராசாக்குப்பம் கிராமத்தில் பச்சையம்மாள் என்பவர் நிலத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு கிராமத்தில் மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 9ம் தேதி மர்ம நபர்கள் டிரான்ஸ்பார்மரை உடைத்து அதிலிருந்து 99 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வடலுார் மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் டிரான்ஸ்பார்மர் உடைத்து காப்பர் கம்பிகள் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். இது குறித்து வடலுார் உதவி மின் பொறியாளர் சல்மா 55; கொடுத்த புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ள மர்ம கும்பலை முற்றிலுமாக கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !