கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு
மந்தாரக்குப்பம்: நெய்வேலியில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நெய்வேலி மந்தாரக்குப்பம் என்.எல்.சி., உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியில் 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டியில் முதல் பரிசை நெய்வேலி கிங்க்ஸ் அணியும், நெய்வேலி தோழர்கள் அணி இரண்டாம் பரிசையும், நீல நிலவு அணி மூன்றாம் பரிசையும், , பதினொரு நட்சத்திரம் அணி நான்காம் பரிசையும் பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையே 20,000, 15,000, 10,000, 5,000 ரூபாய் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நெய்வேலி தோழர்கள் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்