உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம்

சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம்

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் விடுமுறை நாளான நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.தமிழகத்தில் சென்னை மெரினா பீச்சிற்கு அடுத்து, கடலுார் சில்வர் பீச் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய பொழுது போக்கு இடமாக உள்ளது. மிக அழகான நீளமான கடற்கரையான சில்வர் பீச் மாவட்ட மக்களின் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.தற்போது மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஞாயிற்று கிழமையான நேற்று காலை முதலே சில்வர் பீச்சில் மக்கள் குவியத் துவங்கினர். சிறுவர்கள் முதல், இளைஞர்கள் வரை கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை