வெள்ளம் பாதித்த பகுதியில் நிவாரணம் கடலுார் எம்.எல்.ஏ., வழங்கினார்
கடலுார்,: கடலுார் ஒன்றிய பகுதி களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,000 குடும்பங்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.கடலுார் ஒன்றியம், நாணமேடு, உச்சிமேடு, சுப உப்பலவாடி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,000 குடும்பங்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., டாக்டர் பிரவீன் அய்யப்பன் ஆகியோர் நிவாரண உதவிகள் வழங்கினர்.கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சித் தலைவர் காந்தாமணி கண்ணன், முன்னாள் ஊராட்சித் தலைவர் லட்சுமணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.