மேலும் செய்திகள்
துணை முதல்வர் வருகை; மாவட்ட செயலாளர் அழைப்பு
18-Nov-2024
சிறுபாக்கம்: துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட. தி.மு.க., மேற்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கையில், தி.மு.க., மாநில இளைஞரணி செயலர், தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. அதனால், கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, பேரூர், ஒன்றிய, கிளை, வார்டு பகுதிகளில் கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்க வேண்டும்.மேலும், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், முதியோர்கள், கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். அதில், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், நகர, பேரூர், ஒன்றிய, கிளை, வார்டு செயலர்கள், அனைத்து சார்புஅணி நிர்வாகிகள் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
18-Nov-2024