மேலும் செய்திகள்
ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை: இயக்குநர் ஆய்வு
11-Nov-2024
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடந்த திட்டப் பணிகளை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளர் ஆய்வு செய்தார்.கடலுார் மாவட்டத்துக்கு ஆய்வு பணிக்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி வருகிறார்.இதனால் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வு பணிகளை செய்து வருகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடந்து முடிந்த மற்றும் நடக்கும் பணிகளையும் தமிழக சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளர் பிரதாப் ஆய்வு செய்தார்.அதன்படி சுதாகர் நகரில் போடப்பட்ட சாலையை சுத்தியல் கொண்டு உடைக்க செய்து தரமாக உள்ளதா என ஆய்வு செய்தார். நகரில் நடக்கும் பல பணிகளையும் ஆய்வு செய்த பின் பணிகளை தரமாக செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். கமிஷனர் கிருஷ்ணராஜன், இன்ஜினியர் வெங்கடாஜலம் உடனிருந்தனர்.
11-Nov-2024