உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இடையூறு இன்றி ஆனி திருமஞ்சனம் போலீசாருக்கு தீட்சிதர்கள் நன்றி

இடையூறு இன்றி ஆனி திருமஞ்சனம் போலீசாருக்கு தீட்சிதர்கள் நன்றி

சிதம்பரம் : நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் அமைதியாக நடக்க பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினருக்கு கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவசுந்தர தீட்சிதர் நன்றி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவரது அறிக்கை: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனிதிருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த மாதம் 23ம் தேதி துவங்கி இம்மாதம் 3ம் தேதி வரை நடந்தது. விழாவில், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கூட்ட நெரிசல், அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும். பாரம்பரிய மத ரீதியிலான வழிபாட்டு முறைகளில் இடையூறு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என, பொது தீட்சிதர்கள் சார்பில், மாவட்ட எஸ்.பி., க்கு மனு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் விழுப்புரம் டி.ஐ.ஜி., உமா, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி., லாமேக், நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர். முக்கியமாக பொது தீட்சிதர்கள் பாரம்பரியான பூஜை முறைகளை எந்தவித இடையூறுமின்றி சிறப்பாக நடக்க காவல் துறையினரும், சப் கலெக்டர் கிஷன்குமார் அறிவுறுத்தல்படி வருவாய்த்துறையினரும் ஒத்துழைப்பு அளித்தனர். பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்ய உரிய பாதுகாப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி