தினமலர் - பட்டம் வினாடி வினா பத்திரக்கோட்டை மாணவர்கள் ஆர்வம்
நடுவீரப்பட்டு: புதுச்சேரி 'தினமலர் -பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து, 'பதில் சொல், பரிசு வெல்' என்ற வினாடி வினா போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இந்த மாணவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு மூன்று சுற்றுகளாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மீனாம்பிகை தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.போட்டியில் மாணவிகள் சுவேதா, வினோதினிஆகியோர் கொண்ட குழு முதலிடத்தையும், ஹரிணி, யமுனா ஆகியோர் கொண்ட குழு இரண்டாம் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.மாணவர்களுக்கு பட்டம் வினாடி வினா வழிகாட்டியாக செயல்பட்ட ஆசிரியர்கள் ஜீனத்துன்னிசா, உண்மை, சத்தியவாணி உள்ளிட்ட ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.