உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுத்திறனாளிகள் நுாதன போராட்டம் 

மாற்றுத்திறனாளிகள் நுாதன போராட்டம் 

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நுாதன முறையில் போராட்டம் நடத்தினர்.  மாதாந்திர உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிகரம் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் கடலுார் கலெக்டர் அலுவலகம் முன், காது மற்றும் கைகளில் பூ சுற்றிக் கொண்டு நுாதன முறையில் போராட்டம் நடத்தினர். சங்க தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார். செல்வி, ராஜசேகர் முன்னிலை வகித்தனர். கவுரவ தலைவர் குமார், தனியார் பஸ் தொழிலாளர் சங்க தலைவர் செல்வம், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி