மேலும் செய்திகள்
மாநில கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா
22-Oct-2024
கடலுார்: கடலுார் செஸ் அகாடமி சார்பில் 26வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி மஞ்சக்குப்பத்தில் நடந்தது. செஸ் அகாடமி இணை செயலாளர் ஸ்ரீதரன் வரவேற்றார். கவுரவ தலைவர் ராஜா போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 570 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 7 வயது, 10,13,17 வயது மற்றும் பெரியவர்கள் என தனித்தனி பிரிவுகளில் போட்டி நடந்தது.மாநில நடுவர் அரவிந்தசாமி தலைமை நடுவராக பங்கேற்று போட்டியை நடத்தினார். பரிசளிப்பு விழாவில் சுபஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் தீபக், செஸ் அகாடமி தலைவர் கலைச்செல்வன், பொருளாளர் தமிழ்ச்செல்வி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் துர்கா ஆகியோர் போட்டிகளில் வென்ற 150 பேருக்கு பரிசுகளும் 7,000 ரூபாய் ரொக்க பரிசும் வழங்கினர்.போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்கள், சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செஸ் பயிற்சியாளர் பிரேம்குமார், புவனா பிரேம்குமார் செய்திருந்தனர்.
22-Oct-2024