உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / த.வா.க., நிர்வாகிகள் நியமனம் மாவட்ட செயலாளர் அழைப்பு

த.வா.க., நிர்வாகிகள் நியமனம் மாவட்ட செயலாளர் அழைப்பு

சேத்தியாத்தோப்பு : புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிகளுக்கான நியமன கடிதம் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என கடலுார் தெற்கு மாவட்ட த.வா.க.,செயலாளர் சேரலாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே தீப்பாய்ந்த நாச்சியார்கோவில் எதிர்புறம் உள்ள கே.கே.எஸ்., திருமண மகாலில் நாளை 12 ஆம்தேதி காலை 9.00 மணியளவில் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதிகளுக்கான நியமன கடிதம் வழங்கும் விழா நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., நியமன கடிதத்தை நிர்வாகிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார். விழாவில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், அனைத்து நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை