மேலும் செய்திகள்
தி.மு.க., பாக முகவர்கள் ஆய்வுக் கூட்டம்
06-Jan-2025
வேப்பூர்: நல்லுார் ஒன்றிய தி.மு.க., பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆய்வுக் கூட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் நடந்தது.கூட்டத்திற்கு, ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி சக்திவினாயகம், ஒன்றிய துணைச் செயலர்கள் அன்புக்குமரன், மாரிமுத்தாள் குணா, முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் முன்னிலை வகித்தனர். தொகுதி மேற்பார்வையாளர் சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். திட்டக்குடி தொகுதி மேற்பார்வையாளர் ரமேஷ் ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர்கள் பாபு, குணா, சூர்யா, நிர்வாகிகள் மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். இதில், வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டுகளை சேகரிப்பதற்கான பணிகள், ஆட்சியின் சிறப்புகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
06-Jan-2025