தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கல்
நெய்வேலி: நெய்வேலியில் தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தமிழகத்தில், மகளிர் உரிமை தொகை ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு மற்றும் தி.மு.க ஆட்சி அமைத்தால், ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நெய்வேலி ஆர்ச் கேட் அருகே சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கு றிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய அவைத்தலைவர் வீரராமச்சந்திரன், நன்மாறபாண்டியன், ஒன்றிய பொருளாளர் ஆனந்த் ஜோதி, பொன்னம் பலம், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் பிச்சையா டாக்டர் செந்தில், மாணவரணி ஒன்றிய அமைப்பாளர் உதயகுமார், ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோபு, இலங்கேஸ்வரன், பைரவன், வாஜித் கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.