உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூதாட்டியிடம் அத்துமீறிய போதை வாலிபர் போலீசிடம் அலப்பறை

மூதாட்டியிடம் அத்துமீறிய போதை வாலிபர் போலீசிடம் அலப்பறை

விருத்தாசலம்: மூதாட்டியிடம் அத்துமீறியதால் கைது செய்யப்பட்ட போதை வாலிபர், போலீஸ் ஸ்டேஷனில் அலப்பறை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.விருத்தாசலம் அடுத்த சு.கீனனுாரை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் அய்யப்பன், 21. கடந்த 11ம் தேதி மாலை 6:00 மணிக்கு, மதுபோதையில், கருவேப்பிலங்குறிச்சி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியியிடம் தவறாக நடக்க முயன்றார்.அவரது அலறல் சப்தம் கேட்டு, கிராம மக்கள் அய்யப்பனை பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் அவரை கைது செய்தனர்.இந்நிலையில், போதை வாலிபர் அய்யப்பன், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில், போலீசாரிடம் அலப்பறை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், அதிக போதையில் உள்ள அய்யப்பன், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசிடம், 'டிரஸ்சை கிழிச்சிட்டீங்க, எப்போ வாங்கி தருவீங்க. எப்டியும் அடிச்சு கிழி கிழினு நைட்டு புல்லா கிழிக்க போறீங்க.ஒரு பிரியாணி ஒரு குவாட்டர் வாங்கி தாங்க. அதுக்கு அப்புறம் மேல கை வையுங்க. இல்லாட்டி கொலை கேஸ்ல உள்ள போயிடுவீங்க. அப்புறம் ஜட்ஜ் அம்மாட்ட, நைட்டு புல்லா வச்சிருந்தோம் செத்துட்டானு சொல்லுவீங்க. எல்லாத்துக்கும் துணிந்தவன் நான்' என கூலாக கூறுகிறான்.இந்த வீடியோவை அ.தி.மு.க., ஐ.டி.,விங் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ