உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊராட்சி பள்ளியில் கல்வி திருவிழா

ஊராட்சி பள்ளியில் கல்வி திருவிழா

புவனகிரி: புவனகிரி அடுத்த சொக்கன்கொல்லை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 'குழந்தையின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரும் சமூகமும் இணைந்து செயல்படல்' என்ற தலைப்பில் கல்வி திருவிழா நடந்தது. மதி பவுண்டேஷன் ஏற்பாடு செய்த விழாவில், தலைமை ஆசிரியர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க நிர்வாகி நிர்மலா, குழந்தையின் அடிப்படை கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு என்ற தலைப்பில் பேசினார். விழாவில் திட்ட தலைவி மஞ்சுளா சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.மாணவர்களின் பெற்றோர்களுக்கு அடிப்படைக்கல்வி பற்றிய விழிப்புணர்வு, குழந்தையின் கற்றல் திறனை கண்டறிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை சமூக கல்வி பணியாளர்கள் ரேவதி, மீனாட்சி செய்திருந்தனர்.ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை