உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: கலெக்டர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: கலெக்டர் ஆய்வு

கடலுார் ; கடலுாரில் வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடலுார் மாவட்டத்திலுள்ள 2,313 ஓட்டுச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி, பெயர் மாற்றம், திருத்தம் மேற்கொள்ள நேற்று முன்தினம் 16 மற்றும் நேற்று 17, வரும் 23, 24 ஆகிய நாட்களில் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று கடலுார் மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடந்தது. இதில், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பங்கள் வழங்கினர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ