உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  இன்ஜி., மாணவர் துாக்கிட்டு தற்கொலை

 இன்ஜி., மாணவர் துாக்கிட்டு தற்கொலை

கடலுார்: இன்ஜினியரிங் மாணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கடலுார், முதுநகர் அடுத்த சின்னகாரைக்காட்டை சேர்ந்தவர் சீனிவாசன்,45; இவரது மகன் ஹரிஹரன்,21; இவர், கடலுார் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது அறையில் துாங்க சென்றார். இதற்கிடையே, நேற்று காலை அவர் துாக்கில் தொங்கினார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ஹரிஹரனை மீட்டு கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஹரிஹரன் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில், கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ