உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆங்கில பேச்சுத்திறன் வகுப்பு பெண்கள் பள்ளியில் துவக்கம்

ஆங்கில பேச்சுத்திறன் வகுப்பு பெண்கள் பள்ளியில் துவக்கம்

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி வகுப்பு துவங்கியது. அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது, கல்வி இணைச் செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் வகையில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவின் பேரில், 'கோடையில் கற்றல் கொண்டாட்டம்' சிறப்பு திட்டத்தில் ஆங்கிலத்தில் பேசுத்திறன், செஸ் போட்டி, குதிரை ஏற்றம், சிலம்பம், நீச்சல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி, மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு ஆங்கில பேச்சுத் திறன் சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் காளமேகம் தலைமை தாங்கினார். புதுக்கூரைப்பேட்டை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் வரதராஜ பெருமாள், பிரபு முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் திலகவதி வரவேற்றார். மொழி பயிற்சியாளர்கள் ரம்யா, அமலி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் மாலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி