உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லுார் அட்சயாமந்திர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.பரங்கிப்பேட்டை அடுத்த பு. முட்லூர் அட்சயாமந்திர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கி, சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக அரிமா சங்க மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் அருள்முருகன் பங்கேற்று பேசினர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ