மேலும் செய்திகள்
பள்ளியில் விஷம் குடித்த மாணவி
30-Oct-2024
நடுவீரப்பட்டு ; நடுவீரப்பட்டு அருகே பைக்கில் வேகமாக சென்றதை தட்டி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.நடுவீரப்பட்டு அடுத்த பல்லவராயநத்தம் காலனியை சேர்ந்தவர் அண்ணக்கிளி, 47; அதே பகுதியை சேர்ந்தவர் ராமு,42; அண்ணக்கிளி மகன் ராகுல் பைக்கில் வேகமாக வந்ததை ராமு தட்டி கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் இருதரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ராமு,அண்ணக்கிளி ஆகிய இருவரும் அடிபட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.அண்ணக்கிளி, ராமு கொடுத்த தனித்தனி புகாரின்பேரில் நடுவீரப்பட்டு போலீசார் அண்ணக்கிளி, ராகுல், ராமு, இவரது மனைவி மீனாட்சி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
30-Oct-2024