மேலும் செய்திகள்
பைக் விபத்தில் விவசாயி பலி
03-Apr-2026
வேப்பூர்: வேப்பூர் அருகே டிராக்டர் மீது வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். கீழ் ஒரத்துாரை சேர்ந்தவர் பாஸ்கர், 35; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு தனது டிராக்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இரவு 8:00 மணியளவில் விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அடுத்த விளம்பாவூர் அருகே, டிராக்டர் மீது அந்த வழியே பின்னால் வந்த வேன் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
03-Apr-2026