உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பெண் தற்கொலை முயற்சி

 பெண் தற்கொலை முயற்சி

கடலுார்: கடலுார் சில்வர் பீச்சில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடலுார் சில்வர் பீச்சிற்கு நேற்று காலை தனது 3 வயது ஆண் குழந்தையுடன் வந்தார். அப்போது, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகி்ல் இருந்த ஒருவர், பெண்ணை மீட்டு கடலுார் அரசு தலைமையில் மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்து கடலுார், தேவனாம்பட்டிணம் போலீசார் நடத்திய விசாரணையில், கணவரிடம் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ