உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சம்பா பட்டத்திற்கு உரங்கள் சரக்கு ரயிலில் வந்திறங்கின

சம்பா பட்டத்திற்கு உரங்கள் சரக்கு ரயிலில் வந்திறங்கின

விருத்தாசலம்: கடலுார் உட்பட மூன்று மாவட்டங்களுக்கு சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள், சரக்கு ரயிலில் வந்திறங்கின. மாவட்டத்தில் சம்பா பட்டத்திற்கு சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மகசூல் அதிகரிக்கவும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலை தடுக்கும் வகையில் நெற்பயிருக்கு விவசாயிகள் உரமிடுவது வழக்கம். இதற்காக, துாத்துக்குடியில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஸ்பிக் உர நிறுவனத்தில் இருந்து யூரியா 700 டன், டி.ஏ.பி., 350 மற்றும் காம்ப்ளக்ஸ் உரம் 190 டன் என 1,240 டன் உரங்கள் சரக்கு ரயிலில், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தன. இதனை, கடலுார், விழுப்புரம், அரியலுார் மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை