உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீ தொண்டு நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

தீ தொண்டு நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.மாவட்ட உதவி அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இன்பேண்ட் பள்ளி தாளாளர் விஜயகுமாரி, ஆண்டனி பப்ளிக் பள்ளி தாளாளர் லிடியா ஜார்ஜ் முன்னிலை வகித்தனர். நிலைய அலுவலர் சங்கர் வரவேற்றார்.தீயணைப்பு போக்குவரத்து நிலைய அலுவலர்கள் பன்னீர்செல்வம், சதாசிவம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பள்ளி மாணவர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தீயணைப்பு நிலையத்தில் இருந்து பாலக்கரை வரை விழிப்புணர்வு கோஷமிட்டபடி, மாணவர்கள் ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ